Wednesday, 15 November 2017

மூன்றாம் உலகப்போர் - 3rd world war

இதுவரை நடந்த உலக மகா யுத்தங்களிலேயே மிகவும் மோசமான யுத்தம் எது என்று தெரியுமா..? – இனி ‘நடக்கப்போகும்’ போகும் உலக யுத்தம் தான்.ஆம். அடுத்த உலக யுத்தம் தாயராகி கொண்டிருக்கிறது.
சந்தேகமே இன்றி – நீயா நானா போட்டி போடும் நாடுகளான – சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா தான் அடுத்து வரும் உலக யுத்தததிற்கு முழு பொறுப்பும் ஏற்க போகின்றன.
வானத்தில் :
நாம் நினைப்பது போல அடுத்த உலக யுத்தமானது நிலத்தில் நடக்க போவது இல்லை – வானத்தில் நடக்கப் போகிறது.
சூப்பர் பவர் :
உலகின் மூன்று சூப்பர் பவர் நாடுகளான சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவைகள், சக்தி வாய்ந்த அண்டவெளி அணு ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிகாரப்பூர்வமாக பரிசோதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
இராணுவ பலம் :
இது போன்ற பரிசோதனைகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் இராணுவ பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது தான் நிதர்சனம்..!
உலக போர் :
மிக பெரிய நாடுகளின் இராணுவ பலம் எதற்காக அதிகரிக்கப்படுகிறது..? அது எதில் சென்று முடியும்..? – என்பதற்கு, இதற்கு முன் நடந்த உலக போர்களே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தொழிநுட்பம் :
இதற்கு ஆதாரமாய் பிரபல அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கையான ‘பாப்புலர் சயின்ஸ்’ (Popular Science) – அடுத்த பனிப்போர் ஆனது திறந்தவெளி அண்டத்தில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ச்சி :
மாட்டு வண்டிகளில் கூட ஜிபிஎஸ் (GPS) பொருத்தப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திற்கு நாம் வந்து விட்டோம். மொபைல் போன் டவர்கள் தொடங்கி ஏடிஎம் (ATM) வரை அனைத்து கட்டுபாடுகளும் செயற்கைகோள்கள் மூலம் தான் நடக்கின்றன.
செயற்கை கோள் :
ஆகையால் இது போன்ற கட்டுப்பாட்டு செயற்கை கோள்களை மனதில் கொண்டு, சூப்பர் பவர் நாடுகள் ஒன்றை ஒன்று வீழ்த்தவும், தேசிய அளவிலான பாதுகாப்பு இல்லாத தன்மையை உருவாக்கவும் திட்டமிடுகின்றன..!
தாக்குதல் :
அது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்தில் அண்டத்தில் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கின்றன.
பாதுகாப்பு :
ஏனெனில், சூப்பர் பவர் நாடுகள் சிட்டிங் டக்குகள் (Sitting Ducks) கிடையாது அதாவது, தாக்குதலில் இருந்து தப்பிக்க எந்த விதமான பாதுகாப்பும் செய்து கொள்ளாத நிலையில் இல்லை என்று அர்த்தம்.
சீனா :
இது சீனாவின் தாக்குதல் நடத்தும் வகையிலான கட்டுப்பாட்டு செயற்கை கோள் ஆகும்.
குறி :
பிரபல ‘ராய்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனமானது, “பூமியின் மேற் பரப்பானது ,படை கலங்களால் நிரப்பபட்டுள்ளது, யுத்ததிற்காக குறியாக உள்ளது..!” என்று குறிப்பிட்டுள்ளது.
செயற்கைகோள் :
அதாவது சுமார் 1200 செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் வெவ்வேறு காரணங்களுக்காக சுற்றி கொண்டிருக்கின்றன.
தொடர்பு :
அதாவது கப்பல் மற்றும் விமானங்களை செலுத்துவதற்காகவும், தொடர்பு சார்ந்த காரணகளுக்காகவும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் சுற்றி கொண்டிருக்கின்றன.
கண்காணிப்பு :
மேல் குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமின்றி செயற்கை கோள்கள், வான் கோள்களுக்குரிய கண்காணிப்பு (planetary surveillance) கருதியும் உலவ விடப்படுகிறதாம்.
முன்னிலை :
செயற்கை கோள்களின் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகிக்க, சீனா மற்றும் ரஷ்யா, அமெரிக்க செயற்கைகோள்களை அழித்துவிட்டு அந்த இடங்களில் தத்தம் செயற்கை கோள்களை நிலைநிறுத்த உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றதாம்.
வாய்ப்பு :
நிலத்தை போல் அல்லாது, எந்த நாட்டு செயற்கைகோளாக இருந்தாலும் சரி, பலம் மற்றும் பிழைத்திருக்கும் வாய்ப்பு ஆகையவைகள் சமமாக உண்டு.
அண்டவெளி யுத்தம் :
அதன் அடிப்படையில் காணும் போது அண்டவெளி யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற வெளிகளில் ‘போர் சாத்தியங்கள்’ உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலை :
அமெரிக்கா மட்டுமே மொத்தம் 500 செயற்கை கோள்களை நிலைநிறுத்தி இருக்கிறது.
இராணுவம் :
அதில் 100 செயற்கை கோள்கள் அமெரிக்க இராணுவம் சார்ந்த வேலைகளுக்காக இயங்குகிறதாம்.
விண்ணில் செலுத்தி :
மறுபக்கம் சீனா கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே மொத்தம் 130 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.
உளவு :
அந்த 130 செயற்கை கோள்களில் உளவு பார்க்கும் செயற்கை கோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகக்து.
சோதனை விண்கலம் :
உளவு செயற்கை கோள்களில் சிக்கி கொள்ளாதபடி வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவின் சோதனை விண்கலம் இது.
விண்வெளி நிலையம் :
சீனா சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை 2022 ஆம் ஆண்டில் நிறுவ இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயுதம் :
செயற்கை கோள்களுக்கு எதிரான ஆயுதம் இப்படி இருக்கலாம் என்ற கணிப்பில் கலைஞர் ஒருவரால் வரையப்பட்டது இது.
விளக்கப்படம் :
இது பூமியின் சுற்று வட்டப்பாதையில் மிதக்கும் தேவை இல்லாத விண்கல மற்றும் செயற்கைகோள்களின் பாகங்கள் சார்ந்த ‘கிராபிக்’ விளக்கப்படம்.
ஏவுகனைகள் :
விண்வெளிக்குள் 6000 மைல்கள் வரை கடந்து செல்லும் வகையிலான ஏவுகனைகள் சூப்பர் பவர் நாடுகளால் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது.
மூன்று நாடுகளும் :
வெளிப்படையாகவே அறிக்கைகளையும், தாக்குதல் சார்ந்த விடயங்களை தெரிவிக்கும், இந்த மூன்று நாடுகளும், எதற்கும் எப்போதிலிருந்தோ தயார் நிலையில் தான் இருக்கின்றன மேலும் வலுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

Tuesday, 14 November 2017

தத்துவம்ஸ்

சிரிக்கவும் சிந்திக்கவும் 


1.நெறைய மார்க் எடுத்து பாஸ் பண்ணி இருந்த அறிவாளினு நினைக்கிறத நிறுத்துங்க....

2.கல்யாண வீட்ல பிரியாணி போடமாட்டோம் சாம்பார் சாதம் தான் போடுவோம்னு அடம் பிடிக்கிறத நிறுத்துங்க....

3.படிச்சதும், அடுத்து எப்ப வேலைக்கு போக போறேன்னு கேக்குறது .வேலைக்கு போனதும் அடுத்து கல்யாணம் எப்பனு கேக்குறத நிறுத்துங்க....

4.சாப்பாட்டை சாப்பிடாம அப்லோட் பண்ணி உசுப்பேத்துவத நிறுத்துங்க....

5.பண்டிகை நாளன்று எஸ்.எம்.எஸ் க்கு காசு பிடிப்பது

6.பொண்ணுங்களுக்கு ட்விட்டர், பேஸ்புக்ல போட்டோ போடாதனு அட்வைஸ் பண்றத நிறுத்துங்க....

7.வேலை இருந்தா ..சொந்த வீடு இருந்தாத்தான் பொண்ணு தருவேன்னு சொல்றத நிறுத்துங்க.

8.பொண்ணுக பசங்கள அண்ணா அண்ணாண்ணு கூப்டறத நிறுத்துங்க....

9.என்னதான் கவர்மெண்ட் பாத்ரூம் கட்டி குடுத்தாலும் ..அதுக்கு பக்கத்துல போய் செவுத்த நாறடிக்கறத நிறுத்துங்க. ...

10.பொண்ணுங்க போன் நம்பர் தரமாட்டேன்னு சொல்றத நிறுத்துங்க....

11.பெண் குழந்தை இருக்குற அப்பாக்கள் எல்லாம் மகளதிகாரம் ஸ்டேடஸ் போடுறத நிறுத்துங்க....

12.சரக்கடிச்சா ஓட்டை இங்கிலிஷ் பேசுரத நிறுத்துங்க.

13.ஆபீஸ் வந்த கண்டிப்பா வேலை பாக்கணும் னு சொல்றது ..வேல செஞ்சாதான் சம்பளம்ன்றத நிறுத்துங்க.

14.டைம் இல்லைன்னு சொல்லி உப்புமாவ சமைச்சு போடறத நிறுத்துங்க...

15.கல்யாணம் ஆயிட்டாலே பொண்ணுங்கள ஆன்டினு கூப்பிடுறத நிறுத்துங்க.

Sunday, 12 November 2017

காதலில் ஜெயிக்க 10 டிப்ஸ் !!!

பெண் நினைத்தால் எந்தப் பையனையும் 'ஜஸ்ட் லைக் தட்’ காதலில் விழவைக்க முடியும்? ஆனால், பசங்க..? 'உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க... ப்ளீஸ்!’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடமே காலில் விழாத குறையாகக் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வருடக் காதலர் தினம் முதல் 'க்ரீன் சிக்னல்’ கிடைப்பதற்கான சக்சஸ் டிப்ஸ் வழங்குகிறார்... தமிழகத்தின் 'லவ்வர் பாய்’ ஆர்யா!
https://youtu.be/H3_vPJxfXko


 ''நம்ம பசங்க எல்லாம் பொதுவா ஒரு தப்பு பண்ணுவாங்க... ஒரு மூணு ஃபார்முலா மட்டுமே வெச்சுக்கிட்டு, அது மூலமாவே காதலை சக்சஸ் பண்ணிரலாம்னு நினைப்பாங்க. ஆனா, ஒரே ஃபார்முலா எல்லா நேரமும் வொர்க்-அவுட் ஆகாது. நான் சிம்பிளா பத்து விஷயம் சொல்றேன். அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கங்க. காதல்ல அரியர் வைக்காம பாஸ் ஆகிடலாம்!''  




நல்லவன்போல நடிப்பது: ''காலங்காலமா நம்ம பசங்க பண்றதுதான். ஆனா, இது ரொம்பத் தப்புங்க. நாம கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்ம கேரக்டரை நேர்மையா சொல்லிடணும். 'நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிறவன்’தான் மோசமான ஆளா இருப்பான்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் தெரியும்!''  


அழகான பொண்ணாச்சேனு தயக்கம்: ''இது மட்டும் இருக்கவே கூடாது பாஸ். தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கானு, அவ ரேஞ்சுக்கு சல்மான் கானையும் சிம்புவையுமா தேட முடியும். அந்தப் பொண்ணு படிக்கிற இடத்துல, பழகுற இடத்துல யார் இருக்காங்களோ, அவங்கள்ல ஒருத்தனைத் தான் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும். ஸோ, தயக்கம் தவிர்!''  


பார்த்தவுடனேயே காதல் சொல்வது: ''ஒரு பொண்ணைப் பார்த்ததும் நமக்கு பல்பு எரியலாம். ஆனா, காதலை உடனே சொல்லக் கூடாது. ஏன்னா, லவ்வுங்கிறதே ஒரு லாங் டைம் ப்ராசஸ். அதே சமயம் 'இதயம்’ முரளி ரேஞ்சுக்கு இழுத்துட்டே இருக்கவும் கூடாது. ஒருவேளை அந்தப் பொண்ணு அடுத்த ஃப்ளைட்ல அமெரிக்கா போறானா, அப்ப யோசிக்காம... உடனே லவ் சொல்லிடு!''  


காதலுக்கு ஓ.கே. சொல்லலைனா...: ''அக்செப்ட் பண்ணிட்டா ஓ.கே. இல்லைன்னா, 'நோ பிராப்ளம்’னு விட்டுடணும். கட்டாயப்படுத்தினா காதல் வர்றதைவிட, கண்டுக்காமவிட்டா பின்னாடி காதல் வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம்.''


ஈகோவுக்கு வளைந்து கொடுப்பது: ''எந்தப் பொண்ணுகிட்டயும் சின்னதாவோ பெரிசாவோ ஒரு ஈகோ இருக்கும். அந்த ஈகோவை க்ளாஷ் பண்ணிட்டு கரெக்ட் பண்றதுலதான் த்ரில்லே இருக்கு. 'நம்ம ஈகோவையே காலி பண்ணவன் இவன்’னு பொண்ணு மனசுல ஒரு நினைப்பு வந்தால்தான், உங்க மேல காதல் அதிகரிக்கும்.''



வசதியான காதலன்: ''தன் லவ்வர் பைக், கார், ஐபோன் வெச்சிருக்கணும்னு தெளிவான பொண்ணுக யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்த்தா, அந்தப் பொண்ணு நம்ம லைஃபுக்கு வேண்டாம் நண்பா!''



பொசஸிவ்னெஸ்: ''காதல், கல்யாணத்துக்கு அப்புறமும் வாழ்க்கை முழுக்கக் கடைபிடிக்க வேண்டிய லைஃப்லாங் ரூல் இது. நம்ம லவ்வர் கிட்ட இன்னொரு பொண்ணைப் பத்தி பாசிட்டிவோ, நெகட்டிவோ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசக் கூடாது. வேணும்னா, நம்ம அம்மா பத்தி, அவங்க அம்மா பத்திப் பேசிக்கலாம்!''



வெளியே அழைத்துச் செல்வது: ''பெண்களுக்கு பிரைவஸிதான் பிடிக்கும். கூட்டமான இடங்கள் பிடிக்காதுன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, கூட்டமான இடங்களுக்குப் போறப்போ, அவங்களை நாம எப்படிப் பாதுகாப்பா கூட்டிப் போயிட்டு வர்றோம், பத்திரமாப் பார்த்துக்குறோம்னு அவங்க கவனிப்பாங்க!''


கலகல பேச்சு: ''இதுதாங்க ரொம்ப முக்கியம். இதை மட்டுமே வெச்சுதாங்க என் பொழப்பு ஓடுது. காமெடினு நினைச்சுட்டு நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா, அதை அவங்க ரசிக்கிறது முக்கியம். சிலருக்கு மொக்கை போட்டாக்கூடப் பிடிக்கும். சிலருக்கு ஃபீலிங்ஸாப் பேசினா பிடிக்கும். எது பிடிக்கும்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசுங்க!''



அடிக்கடி ஐ லவ் யூ: ''அது கட்டாயம். தினமும் குறைஞ்சது 100 தடவையாச்சும் 'லவ் யூ... லவ் யூ...’ சொல்லிட்டே இருக்கணும். அதுதான் உங்க காதலின் ஹெல்த்துக்கான விட்டமின்!  



கடவுள் எல்லா மனுஷங்களுக்கும் கொடுத்த காஸ்ட்லி பரிசுதான் காதல். அதை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட் பாஸ்!'' 




பறக்கும் மீன் - கோலா , flying fish


கோலா

உலகின் பல்வேறு கடல் பகுதிகளில், கடல் மட்டத்தை காட்டிலும், பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன. கடலின் ஆழத்தில் வேகமாக செல்லும் வகையில், அவற்றின் உடல் அமைப்பு உள்ளது. ஆழத்தில் அதிக வேகம் எடுக்கும் இந்த மீன்கள், கடல் நீரை துளைத்துக் கொண்டு, ஏவப்பட்ட ஒரு ராக்கெட் போல கடல் மட்டத்திற்கு மேலே சீறிக் கிளம்புகின்றன. பார்ப்பதற்கு இவை பறப்பது போல தோன்றும். ஆழ்கடலில் உள்ள மேக்ரல், டுனா, ஸ்வார்டுபிஷ், மர்லின் உள்ளிட்ட சில பெரிய வகை மீன்கள், தங்களின் ராட்சத பசிக்கு, சிறிய மீன்களை உண்டு தீர்க்கின்றன. இந்நிலையில், தங்களை உணவாக கொள்ள வரும் இந்த எதிரி மீன்களிடம் இருந்து தப்பவே, குறிப்பிட்ட சில மீன் வகைகள் கடலுக்கு மேலே மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று தப்புகின்றன. பறக்கும் மீன்களின் விருப்பமான உணவு, கடல் மட்டத்தில் மிதக்கும் ஒரு வகை நுண்ணியிர்கள் தான். இவற்றை கண்டறிந்து உண்பதற்காகவும் பறக்கும் மீன் கள் கடல் மட்டத்திற்கு மேலே பாய்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில், 40க்கும் மேற்பட்ட பறக்கும் மீன் வகைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கை போன்ற உறுப்புக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. பொதுவாக, மற்ற மீன்களில் காணப்படும் துடுப்புக்களே இறக்கைகளாக பரிணாமம் பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பறக்கும் மீன்களில் சில நான்கு இறக்கைகளை பெற்றவைகளாக காணப்படுகின்றன. இந்த மீன்கள், மற்ற மீன்களை காட்டிலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்திற்கு, அதிக தூரத்திற்கு பறக்கும் திறன் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்கு அடியில் இருந்து, நீரை துளைத்து, வேகமாக கிளம்பும் இந்த மீன்கள், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் மேல் எழும்புகின்றன. பின், சில நிமிடங்களுக்கு அதே வேகத்தில் காற்றில் பறக்கிள்றன. காற்றில் பறக்கும் போது, பின்புற வாலை, சுக்கானாக பயன்படுத்தி, செல்ல வேண்டிய திசைக்கு, தங்களின் போக்கை மாற்றிக் கொள்கின்றன. சில மீன்கள் கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு எழும்பி, 600 அடி தூரம் வரை காற்றிலேயே பறக்கும் சக்தி கொண்டவை. நீர்பரப்பில் இறங்கும் வேளையில், குறிப்பிட்ட வேகத்தில் நீருக்குள் பாய்ந்து, மீண்டும் மேலே எழும் வழக்கம் சில பறக்கும் மீன்களிடம் காணப்படுகிறது. பறக்கும் மீன்கள், மற்ற சில நீர் வாழ் இனங்களைப் போலவே வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் குணத்தை கொண்டவை. இது, மீனவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. பறக்கும் மீன் வேட்டைக்கு இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், அதிக ஒளி உமிழும் விளக்குகளை கடல் பரப்பில் பயன்படுத்துகின்றனர். இந்த வெளிச்சத்தால் கவரப்படும் பறக்கும் மீன்கள், ஒட்டு மொத்தமாக ஒரே இடத்திற்கு வந்து குவிகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏராளமான பறக்கும் மீன்களை பிடித்து விடுகின்றனர்! ***

Saturday, 11 November 2017

மரணத்திர்க்கு பின் என்ன நடக்கிறது நமக்கு ?

றப்பு என்றாலே நமக்கு ஒரு அச்சம்; மனதிலே ஒரு பயம். அதுதான் நமது முடிவா? இல்லை, அதற்குப் பிறகும் இன்னொரு பிறப்பு அல்லது ஒரு வாசல் காத்திருக்கிறதா? விடைகாணமுடியாத ஒரு கேள்வி. 

இறந்தவர்கள் யாரும் இதுவரை நம் முன் இறப்பிற்குப் பின் நடப்பது என்ன என்று சொன்னதில்லை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடையாக சாவின் விளிம்பைத் தொட்டுப்பார்த்து மீண்டவர்கள் சொல்லும் அனுபவங்கள் நாம் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பதை அறியத் துணையாக இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்து அந்த சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் வாயில்களைத் தட்டும்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிப் பலர் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் பெரும்பாலும் சாவு என்பது ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே காட்டுகின்றன.
இந்த அனுபவம் பலருக்கு, இறப்பிற்குப்பின் வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதி செய்வதாகவே இருக்கிறது. உண்மையில் இறப்பைக்கண்டு அஞ்சிடும் பலருக்கு நமது உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் அதற்கு மரணமில்லை. தொடர்ந்து வாழ்கிறது என்ற எண்ணமே மரணபயத்திலிருந்து வெளிவர உதவியாய் இருக்கிறது. இதில் நம்பிக்கையில்லாதவர்கள், இவையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சொல்பவர்கள்கூட, இந்த நம்பிக்கையால் நிம்மதி அடையும் பெரும்பாலோரின் எதிர்ப்புக்களிடையேதான் தங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் முன் வைக்க வேண்டியுள்ளது. 
ஜேம்ஸ் ஆல்காக் என்பவர் ஏன் மரணத்திற்குப் பிறகு ஆன்மா அழிவதில்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்குக் காரணம் கூறுகிறார். "அறிவுபூர்வமாக எப்படியும் ஒரு நாள் நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்லப்போகிறோம் என்று தெரிந்த மக்கள் அதை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில்லை. இறப்பிற்குப் பிறகும் ஒரு வாழ்வு இருக்கிறது. நாம் முற்றிலும் அழிவதில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஒரு தெம்பைத்தருகிறது"
சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள் பற்றிய குறிப்புக்கள் இன்று நேற்றல்ல, தொன்று தொட்டே நிலவி வருகிறது. இதைப்பற்றிய முதல் செய்தியாக ப்ளேட்டோவின் Republic என்ற நூ¢ல் இறந்தபிறகு உயிர் மீண்டு வருவதாகக் கூறப்படும் ஒரு வீரனைப் பற்றி குறிப்பிடுகிறது. பைபிளிலும் இறப்பிலிருந்து உயிர்ப்பிப்பதாகக் கூறப்படும் பல கதைகள் உள்ளன. மற்ற பல மதநூல்களும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கைகள் இருந்துவந்தாலும் சமீபகாலத்தில் இதுபோன்ற அனுபவங்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அனுபவங்களை ஒப்புக் கொள்வதில்லை. இவைகள் யாவும் இறக்கும்போது செயலிழக்கும் மூளையில் ஏற்படும் பிரமைகள் என்றும், ஒருவிரிந்த கனவு என்றுமே அவர்கள் கருதுகிறார்கள்.
அப்படி என்றால், எது சரியான விளக்கம்? இந்த சாவைத் தொட்டுவரும் அனுபவங்கள், இறப்பிற்குப்பின் துவங்கும் வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை, நாம் காற்றோடு காற்றாகக் கலக்குமுன்னர் ஏற்படும் இறுதி அனுபவத்தைக் குறிக்கிறதா?
இறப்பிற்குச் சற்று முன்னர் தாங்கள் பெற்றதாகப் பலர் கூறும் அனுபவங்கள் நமக்கு வரும் கனவுகளைவிடச் சுவையானவை. இவை நிஜம்போலவேத் தோன்றுகின்றன. சாவுக்குப் பின் ஏற்படும் அனுபவங்களைச் சொல்லும் எந்த ஆராய்ச்சியும் இவற்றை மனதில் கொள்ளவேண்டும். இந்த அனுபவங்களையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கம் தேடும்போது, மனங்களைப் பற்றியும், சுய உணர்வுகள் பற்றியும் கேள்விகள் எழுகின்றன.
சாவைத் தொட்டுவரும் அனுபவங்களைச் சந்தித்தவர்கள் தங்களது உடலைவிட்டு வெளியே வருவதை உணர்கிறார்கள். அப்போது அவர்கள் அனுபவிப்பது ஒரு பரிபூரண சுதந்திரம், வலியே இல்லாத ஒரு நிலை. இந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்போது தாங்கள் படுத்திருக்கும் இடத்திற்கு மேலே மிதப்பதாக அறிகிறார்கள். அங்கிருந்து அவர்களால் கீழே படுத்திருக்கும் 'அவர்களைப் ' பார்க்கமுடிகிறது. தான் படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி என்ன நடக்கிறது, கூடி நிற்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் கூறும் விஷயங்கள் மிகவும் சரியாகவே அமைகின்றன. இந்த செத்துப் பிழைக்கும் அனுபவத்தை உடலைத் தாண்டிய அனுபவம் (Out of body experience) என்றும் கூறலாம். இத்தகைய அனுபவங்களுக்குத் தகுந்த உதாரணமாக, சியாட்டில் நகருக்கு முதல் முறையாகப் பயணம் செய்த மரியா என்ற பெண்ணிற்கு நேர்ந்த நிகழ்ச்சியைக் கூறுவார்கள்.
மரியா என்ற வாஷிங்டன் நகரைச் சேர்ந்த பெண் 1977ம் ஆண்டு தன் நண்பர்களைக் காண முதல்முறையாக சியாட்டில் நகருக்கு வருகிறாள். வந்த இடத்தில் அவளுக்கு பலத்த இருதயநோய் ஏற்பட அவள் Harbourview மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு கிம்பர்லி கிளார்க் என்ற சமூகசேவகி மரியாவை உடனிருந்து கவனித்து வந்தார். திடீரென மரியாவின் இருதயம் செயலிழக்க, மருத்துவர்கள் செயற்கை முறையில் அவள் இருதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள்.

அதன் பின்னர் கிம்பர்லி கிளார்க்கிடம் மரியா சொன்ன செய்திகள் தான் பரபரப்பானவை. "டாக்டர்களும் நர்ஸ்களும் என் உடலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது அதிசயமான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் உயர நாலாவது மாடியின் உயரத்திற்கு மிதந்து சென்று அந்த மேற்கூரையிலிருந்து என்மீது நடத்தப்படும் சோதனைகளைக் காண முடிந்தது என்று மரியா கூறியபோது கிளார்க் அதை நம்பவில்லை. ஆனால் அதற்குப்பிறகு அவள் கூறியவை திகைப்பூட்டின. தனது உடல்நிலைபற்றிய குறிப்புப்படங்கள் மானிட்டரிலிருந்து வெளிவருவதைப் பார்த்ததாகக் கூறினாள். அதுதவிர, தான் மேலும் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே மிதந்து சென்றதாகவும் அவள் கண்ட அவசர சிகிச்சை வழியைப்பற்றியும் அதன் கதவுகள் முன்புறமாகத் திறக்கப்படுவதைப் பற்றியும் விரிவாகக் கூறியபோது நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த மருத்துவமனைக்கு முதல் முறையாக மரியா வந்திருப்பதால் அதன் பல வேறு இடங்கள் பற்றி அவள் அறிந்திருக்க வழியேயில்லை. அவள் மேலும் தனது கட்டிடத்திற்கு வலதுபக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் ஒரு ஜன்னலின் விளிம்பில் ஓரத்தில் கிழிந்துபோன ஒரு டென்னிஸ் ஷ¥வைக் கண்டதாகவும் அதன் முடிச்சு ஷ¥வின் அடிப்பாகத்தில் இருந்ததாகவும் கூறினாள். மரியா இருந்த இடத்திலிருந்து அப்படிப்பார்க்க வாய்ப்பே இல்லை. கிளார்க் அடுத்த கட்டிடத்தின் மூன்றாவது தªமாடிக்குச் சென்று அந்த ஜன்னலில் சோதனையிட்டபோது மரியா கூறியது சரியாகவே இருப்பது தெரியவந்தது இறப்பின் பின்னும் ஆன்மா அழியாமல் இருக்கிறது என்பதை நம்புபவர்கள் இதைத் தகுந்த சான்றாகக் காட்டுகிறார்கள். 
மற்றுமொரு நிகழ்ச்சி. Laurelynn என்ற பெண்மணி ஒரு சாதாரண அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறாள். ஆனால், அறுவை சிகிச்சையின் போது ஆழமாகக் கத்தி பாய்ந்ததால் அவளது உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரபரப்புடன் இருந்தார்கள். அவர்கள் உடையில் வெளியே எங்கு பார்த்தாலும் ரத்தம். என்னால் அங்கு என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ள முடியவில்லை. அப்போது என்னால் டாக்டர்கள் என்னுடைய உடலில்தான் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஆனால் அதுபற்றிய கவலையும் அப்போது எனக்கில்லை; நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்; அருமையான நேரம் அது. அவர்களிடம், 'எனக்கு ஒன்றுமில்லை, என்னைப்பற்றிக்கவலைப் படாதீர்கள், நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று சொல்ல நினைத்தேன். உடலைவிட்டுப் பிரிந்து சென்ற நான் வேறு உலகத்தில் பிரவேசிக்கிறேன். அங்கு அமைதி- பூரண அமைதி- உடலில் எந்தவிதமான வலியுமில்லை. ஆனால் ஒரு சுகானுபவம் இருந்தது; இருட்டான, ஒரு மகிழ்ச்சி ததும்பும் ஒரு இடம்; அன்பும் ஆதரவும் என்னைச் சுற்றிப் பரவியிருப்பதை உணர்ந்தேன். அந்த சுகமான இருட்டு வழி தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தது.
இதுவரை பூமியில் அனுபவிக்காத ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவம் அது- இருட்டுவழியின் எல்லையில் ஒரு மஞ்சள் நிறம் கலந்த வெண்மையான ஒளியைக் காண்கிறேன். அந்த அமைதியை அந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வெண்மை கலந்த ஜோதியை நான் அடைவதற்கு முன்னால், எனது வலதுபுறம் யாரோ இருப்பதை உணரமுடிந்தது- 
அதுவேறுயாருமில்லை- ஏழு மாதங்களுக்கு முன்னால் இறந்த என் மனைவியின் சகோதரன்தான். என்னுடைய கண்களாலும் காதுகளாலும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும் அது எனது மனைவியின் சகோதரன்தான் என்பதை உணரமுடிந்தது. அவனுக்கு உருவமில்லை; ஆனால் அவனை உணர முடிந்தது- அவனது சிரிப்பை அவனது நகைச்சுவை உணர்வை என்னால் அறிய முடிந்தது- அவன் என்னை வரவேற்கக் காத்திருந்தான்" - கென்னத் ரிங் கின் Lessons from the Light".
இதுபோன்ற அனுபவங்கள், இவைகளை வெறும் மனப் பிரமையென்றோ, கட்டுக்கதைகள் என்றோ ஒதுக்கிவிட முடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. இந்த அனுபவங்கள் ஏற்பட்டவர்கள் இந்த பூமியை விட்டு வேகமாகத் தாங்கள் செல்வதை உணர்கிறார்கள். பிறகு ஒரு ஒளிநிறைந்த அன்புமயமான இடத்தை அடைகிறார்கள். அங்கு முன்னமே இறந்த அவர்களது உறவினர்கள் அவர்களை 'நீங்கள் இங்கே வருவதற்கு நேரம் இன்னும் வரவில்லை, இன்னும் பூமியில் நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது", எனக் கூறித் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த உலகிற்குத் திரும்பி வந்தவுடன் எப்படி தனது இறப்பு அனுபவம் ஒரு ஆனந்தத்தை அளித்தது என உணர்கிறார்கள். ஆனால், அந்த அனுபவத்தைப்பற்றி மற்றவர்களிடம் விளக்க சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுகிறார்கள். இந்த அனுபவம் அவர்களது வாழ்க்கையையே மாற்றுகிறது. அவர்கள் அதற்குப்பிறகு சாவைக்கண்டு அஞ்சுவதில்லை. இந்த பூதவுடல் மறைந்தபிறகும் 'நான்'- 'எனது ஆன்மா' உயிர்வாழ்கிறது என அறிகிறார்கள் . 
அதற்குப்பிறகு அவர்களது அணுகுமுறையில், மற்றவர்களை மன்னிப்பதில், அன்புகாட்டுவதில், உதவி செய்வதில் ஆன்மிகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகிறார்கள்- இந்த அனுபவம் அவர்கள் வாழ்ந்த வாழ்வை, செய்த நன்மைகளையும் தீமைகளையும் ஒரு சில நொடிகளில் அவர்கள் கண்முன்னே கொண்டுநிறுத்தி அவர்களைப் பண்பட்டவர்களாக்குகிறது.
சென்ற நூற்றாண்டின் இறுதிவரை இறந்தபின் என்ன நடக்கிறது எனபது பற்றிப் பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் பெருவாரியான மக்கள், விஞ்ஞானம், காலம் காலமாக  ஆவி பற்றியும் ஆத்மா பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன எனக் கருதினார்கள். ஆவி உலகம் பற்றி நம்பிக்கை பெருகியது. இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள மக்கள் ஊடகங்களைத் துணை தேடலானார்கள். அவர்கள் இன்னமும் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதில் திட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
1882ல் ஒரு உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டு இறப்புக்குப் பின் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகள் துவங்கின. ஆனால் இறப்பிற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரம் எதுவும் கிட்டவில்லை. 1926ம் ஆண்டு, Sir William Barrett என்ற ஆராய்ச்சியாளர்,  'இறக்கும்போது புலப்படும் தோற்றங்கள்' (Deathbed Visions)  என்ற தனது புத்தகத்தில், இறப்பவர்கள், இறப்பதற்குமுன், வேறொரு உலகத்தைக் காண்கிறார்கள், இறந்தவர்களுடன் பேசுகிறார்கள்” என்று சொல்கிறார். இறக்கும்போது இசையையும் அவர்கள் கேட்டதாகவும், உடலைவிட்டு ஆவிபிரிவதைக் காண முடிந்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால் இன்று வளர்ந்துவரும் மருத்துவ உலகில், இறக்கும் நிலையில் ஏற்படும் அனுபவங்கள் என்பவை அரிதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், இறக்கும் தருவாயிலிருப்பவர்களைச் சுற்றி நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள்; தேவையான மருத்துவ வசதிகள் இருக்காது . இன்றோ பலருக்கு மருத்துவ மனையில் தான் உயிர் பிரிகிறது.- உயிர் பிரியும்போது பெரும்பாலும் அவர்கள் தனித்தே இருக்கிறார்கள். உற்றார் உறவினர் யாருமின்றி தனித்து மருத்துவவமனையில் இறப்பவர்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதையே இது காட்டுகிறது.,
1975ல் ரோமன்மூடி என்பவர் "வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை" எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார். "ஒருவர், இறக்கும் நிலையில்,  அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது." என அவர் கூறுகிறார்.
பல விஞ்ஞானிகள் ரொமான்ட் மூடி கூறிய கருத்துக்களை ஏற்க மறுத்தார்கள். அவர்கள் மூடி, மிகைப்படுத்திக் கூறுவதாகக் கருதினார்கள். .இந்தச் சந்தேகங்களுக்கு விரைவிலேயே தீர்வு கிட்டியது. ஒரு இருதய நோய் நிபுணர் இறக்கும் தறுவாயிலிருந்த 2000 பேர்களிடம் பேசிய 20 வருட அனுபவம், மூடி கூறுபவை சரியென்று சான்றுரைக்கின்றன  என்கிறார். சைப்ரஸிலிருந்து ஒரு பெண் எழுதும் அனுபவமொன்று மூடி கூறுவது சரியாயிருக்கலாம் என்பதையே வெளிப்படுத்துகிறது.
அந்தப் பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள். தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன்.  பிறகு... நான் ஒரு இருண்ட  இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.
இதற்குப்பிறகு சில ஆண்டுகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. கனக்டிகட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Kenneth Ring என்பவர் 1980ல்  சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்த 102 பேரிடம் விவரங்கள் சேகரித்தார். அவற்றில் 50 சதவிகிதத்தினர் அடைந்த அனுபவத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் அடைந்த அனுபவங்களை, கென்னத் ரிங்  'அமைதி, உடலைவிட்டு உயிர் பிரிவது, ஒரு இருட்டு சுரங்கப்பாதையை அடைவது, வெளிச்சத்தைக் ககாண்பது, ஒளியை அடைவது' என ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். இதற்கடுத்த பகுதிகள் வெகு சிலராலேயே உணரப்பட்டன. எனவே, இறப்பின் போது காணும் காட்சிகளில் ஒரு ஒற்றுமை இருப்பதை அவர் கண்டார்.
இறப்பின் விளிம்பில் என்ன நடக்கிறது என்று ஆராயும் போது கலாசாரப் பின்னணியையும் கருத்தில் கொள்ளவேண்டுமா என்ற வினா எழுகிறது. கலாச்சார வேறுபாடு இல்லை என்று நடத்தப்பட்ட சில ஆராய்ச்சிகள் கூறினாலும், மத அடிப்படை  இந்த விஷயங்களை விவரிப்பதில் இடைப்படுகிறது என்பது தெளிவாகிறது. குழந்தைகளிடம் கூட சில ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்கள் இறப்பின் விளிம்பில் மரணமடைந்த தங்கள் நண்பர்களையே காண்கிறார்கள் என்பது ஆச்சரியப் படவைக்கும் விஷயம் . இதற்குக் காரணம்,  அவர்களது நண்பர்கள் வியாதிகளின் காரணமாக மரணமடைவதென்பது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதுதான். சிறுவயதுகளில் யாரும் நோயின் காரணமாக அதிகம் இறப்பதில்லை.
இறப்பிற்கு முன் ஏற்படும் அனுபவத்தைப் பெறுவதற்கு  சாவின் விளிம்புவரை செல்லவேண்டுமா என்பது ஒரு கேள்வி - "இல்லை" என்பதுதான் இதற்கான பதில். தொடர்ந்து சிகிச்சை  எடுத்துக் கொள்பவர்கள், மிகவும் களைப்பாக இருப்பவர்கள், மற்றும் சாதாரணமாக உழைப்பவர்களிடம்கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனுபவங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப்போல  உண்மையானதாகவே தோற்றமளிக்கின்றன. ஒரு சுரங்கப் பாதைக்குள் போவதுபோலத் தெரியும் அனுபவம், ஒரு கற்பனைத் தோற்றமாகத் தெரிவதில்லை.- உடலுக்கு வெளியிலிருந்து நம்மைப் பார்ப்பதாகக் காணப்படும் இத்தோற்றம் உண்மையிலேயே நடப்பதாகவே தோன்றுகிறது.
சாவின் விளிம்பிற்குச் செல்லும் எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அப்படியென்றால் எத்தகைய மனிதர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்படக்கூடும்? மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இந்த அனுபவங்கள் ஏற்படும் என்றும் சொல்வதற்கில்லை. இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் எல்லாரையும் போல பின்புலனும், மனதளவில் ஆரோக்கியமானவர்களுமாகவே இருக்கிறார்கள்.
  
இதைத்தவிர வரவேற்கவேண்டிய ஒரு விஷயம், இந்த அனுபவம் பெற்றவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அவர்கள் போட்டி, பொறாமை, பேராசை போன்ற குணங்களிலிருந்து விடுபட்டு, மற்றவர்களின் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள். இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது எ?ன்பது பற்றிய ஆராய்ச்சி, இந்த மனமாற்றத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. எந்த ஆராய்ச்சியும் இதற்கு விடை காணாமல் முழுமையாய் இருக்க முடியாது.

முகப்பரு நீங்க இதை செய்து பாருங்கள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

அழகு குறிப்புகள் அனைத்தும் இங்கே! ஆம். முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள் அனைத்தும் இங்கே!

1. மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

2. தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

3. பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

4. தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்

5. உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது.

6. மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.

7. முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

8. உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

9. தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரைத்து தேய்த்து வந்தால் வழவழப்பு அதிகரிக்கும்.

10. முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவி வரலாம்.

11. படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய் விட்டு அரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.

12. முகப்பரு இருக்கிறதா? கவலை விடுங்கள். சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர சில நாட்களில் முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

13. பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

14. 100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

15. தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

16. உதடு வெடிப்பு நீங்க: பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.

17. வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குரு மறைய சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் போதும்.

18. கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.

19. முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் நீங்க அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும்.

20. முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.

பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.

* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.

* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.

‘நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்’
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!

சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Friday, 10 November 2017

பெண்களை காதலில் விழவைப்பது எப்படி ? How to atract a girl

 பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்கும். ஆண்களின் தலைமுடி, கண்கள், நிறம் என பெண்ணுக்கு பெண் இந்த எதிர்பார்ப்புகள் வேறுபடும். தோற்றத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பதை விட உணர்வு ரீதியாக இடம் பிடிப்பது நீண்ட நாள் நீடிக்கும். இது போன்ற சில விஷயங்களை செய்து பெண்களின் மனதை நீங்கள் திருட முடியும்.

உண்மையான இரக்கம் :

இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள். உதாரணமாக, உங்களை ஒருவர் எப்படி நடத்தினாலும் அவர் மேல் அன்புடன் இருப்பது, பெண்களை சட்டென்று உங்களிடம் விழ வைத்துவிடும்.

பெருந்தன்மை:

பெருந்தன்மை என்பது பணம் மற்றும் பரிசுகள் விஷயத்தில் தாராளமாக இருப்பது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உங்களிடம் நெருக்கமானவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், உங்கள் நேரத்தை செலவிடுதல் போன்றவை இதில் அடங்கும்.

ஆதரவு :

அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும் துணையை மிகவும் பிடிக்கும். அவர்களை யாராவது ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

அவருடைய சாதனைகளை நினைத்து மகிழ்தல்:

தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆண்களை பிடிப்பது போல, தங்களது சாதனைகளை நினைத்து உற்சாகம் அடையும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக அவருக்கு பணி உயர்வு அல்லது பெரிய காரியங்களில் வெற்றியடையும் போது, அதை நீங்களே சாதித்தது போல எண்ணி பெருமை அடைய வேண்டும்.

அவருடைய ஆர்வங்களில் உங்களுக்கும் ஆர்வம்:

அந்த பெண்ணுக்கு பிடித்த விளையாட்டு, உணவுகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அந்த பெண் மிகவும் காதலிக்கும், செய்ய துடிக்கும் ஒரு விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எளிதில் உங்களிடம் விழுந்துவிடுவார்கள்.



அவளுடைய பிரச்சனைகளுக்கு செவி சாய்த்தல்:

ஒரு பெண் உங்களிடன் தனது பிரச்சனைகளை சொல்லும் போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லும் போது, கவனிக்காமல் இருப்பது மிகவும் தவறு. அவளது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். அந்த பெண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.

அன்பாக நடந்து கொள்ளுங்கள்

அந்த பெண்ணிடம் மட்டுமல்லாமல், அனைவருடனும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அவரை அன்பாக பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை தரும்.

வெற்றிகளை பாராட்டுங்கள்

அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடுங்கள். மேலும் வெற்றியடைய வாழ்த்துங்கள். அர்ப்ப விஷயமாக நினைத்துவிடாதீர்கள்.

உங்களது மென்மையான பக்கத்தை காட்டுங்கள்

அனைவருக்கும் ஒரு மென்மையாக பக்கம் இருக்கும். அந்த பெண்ணிடம் உங்களது அக்கறையை காட்டுங்கள்.

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது  இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...