Showing posts with label thinam oru thagaval. Show all posts
Showing posts with label thinam oru thagaval. Show all posts

Tuesday, 7 November 2017

BLUEWALE திமிங்கலம்

திமிங்கலம் பற்றி தெரியாத உண்மை

 நாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம் . அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும் . ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன . என்றால் நம்புவீர்களா ? எதிர்பாருங்கள் இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தப்போகும் திமிங்கிலங்கள் பற்றிய பல வியப்பான தகவல்களுடன் அடுத்தப் பதிவில் சந்திகிறேன் என்று முடித்திருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி ..
லகத்திலையே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றான்றன் திமிங்கலங்கள் . இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும் .திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.
துவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும் அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம் மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள் . ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரிணத்தை பார்த்து பார்த்து இருக்கிறீர்களா ? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம் ! .
இவை ஒரு முறை சுவாசித்தன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவைத் தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.
பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.
மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்க்கும் அதிகமான இறுதி ஆய்வுக்ளின் முடிவில் சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினைக் கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை.திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.
 1970ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
“பாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: “படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன.” அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். ‘பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை'(Darwinism Refuted’ பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ் ஆகும் .
லகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது.சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே .ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள் .
ன்ன நண்பர்களே இன்றைய திமிங்கிலங்கள் பற்றிய தகவல்கள் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .

Monday, 6 November 2017

தினம் ஒரு தகவல்

Thinam Oru Thagaval (தினம் ஒரு தகவல்)

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.



எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது...!

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது  இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...