Showing posts with label kaadhal. Show all posts
Showing posts with label kaadhal. Show all posts

Thursday, 9 November 2017

காதல் என்றால் என்ன ? what is love ?

இது தான் காதல் 

ஆசிரியரிடம், "காதல் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இதற்கு நான் பதில் கூறவேண்டும் என்றால், வயல் வெளிக்கு சென்று, அங்குள்ள சோளத்தில், பெரிய சோளம் ஒன்றைக் கொண்டு வா...அப்பொழுது சொல்கிறேன்!" என்றார் ஆசிரியர்.
"ஆனால் ஒரு நிபந்தனை! ஒரு சோளத்தை ஒரு முறை தான் கடக்க வேண்டும். திரும்பி வந்து எடுக்கக் கூடாது." என நிபந்தனை போட்டார் ஆசிரியர்.
மாணவன், ஆசிரியர் சொன்னபடியே, பெரிய சோளத்தை தேட ஆரம்பித்தான். முதலில் ஒரு சோளத்தைப் பார்த்தான். அடுத்தது அதை விட பெரியதாக இருந்தது. இப்படி, அடுத்த சோளத்தைப் பார்த்ததும், அடுத்தது இதை விட பெரியதாக இருக்கும் என நினைத்து, ஒவ்வொன்றாக கடந்து சென்றான். வயல் வெளியை பாதி கடந்த சமயத்தில், தான் பெரிய சோளத்தை கடந்து வந்துவிட்டதாக உணர்ந்தான். நிபந்தனையின்படி, திரும்பி வரக் கூடாதே...அதனால், வெறும் கையுடன் வந்தான் மாணவன்.
 "இது தான் காதல்! சிறந்த காதலை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறகு மனம் தெளிந்து பார்க்கும்போது , அந்தக் காதலை தவற விட்டிருப்பார்கள்" என்றார் ஆசிரியர்.
(தேடி போய் அலைந்து, கடைசில, உள்ளதும் போன கதை ஆகிவிடாமல் பாத்துக்கணும்னு சொல்றார் வாத்தியார்)
"சரி, அப்படியென்றால், கல்யாணம் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இப்பொழுதும் நீ அதே தோட்டத்துக்கு சென்று பெரிய சோளத்தை கொண்டு வா! அதே நிபந்தனைகள் பொருந்தும்", என்றார் ஆசிரியர்.
கடந்த முறை செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது என்று நினைத்த மாணவன், வயல் வெளியை கொஞ்சம் கடந்த பிறகு, ஒரளவுக்கு உள்ள ஒரு சோளத்தை மிகவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் திரும்பினான் மாணவன்.
"பார். இந்த முறை நீ ஒரு சோளத்தோடு வந்திருக்கிறாய். அதுவும் உனக்கு பிடித்த, இது தான் அங்கு இருக்கும் சோளத்திலேயே பெரிய சோளம் என்ற நம்பிக்கையோடும், திருப்தியோடும் வந்திருக்கிறாய். இது தான் கல்யாணம்", என்று முடித்தார் ஆசிரியர்.
இதவிட சிறந்த விளக்கம் வேற யாராலயும் குடுக்கா முடியாது .... 
எழுத்து .. பாரத் ⧬⧭

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது  இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...