Showing posts with label வதந்தி. Show all posts
Showing posts with label வதந்தி. Show all posts

Thursday, 9 November 2017

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது 

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்தியப் பெருங்கடல் மையம் சார்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம்  தேசிய மாநாட்டில், இந்த அதிர்ச்சிகர ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில், இந்திய தேசிய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் பூர்ணசந்திர ராவ் கூறுகையில், ”இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு மத்தியில் உள்ள கடல் மண்டலத்தில் அமைந்துள்ள டெக்டானிக் தகடுகள், நில அதிர்வை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. இதனால் ஏற்படக்கூடிய நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் சுமார் 8 புள்ளிகளாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளது. இந்த வலிமைவாய்ந்த நிலநடுக்கம், இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவிலே காணப்படுகிறது” என்றார்.

புவியியல் முன்னணி அறிவியலாளர் ராவ் ஆய்வின் படி, இந்த எச்சரிக்கை மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும் எனச் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சூழல் ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்திய நில மண்டல அமைப்பின் அடிப்படையில் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். தற்போதைய சூழலில், கடல் மண்டலத்தில் அமைந்துள்ள டெக்டானிக் தகடுகளின் இயக்கங்களைக் கவனிக்க வேண்டும். இதற்கு முன்னர், இதே எச்சரிக்கையுடன் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே உள்ள தகடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது. அதன் பின்னர், தற்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் வலிமைவாய்ந்த நிலநடுக்கத்தையும் அதன் மூலம் சுனாமியையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது’ என்றனர்.
மேலும், தென் இந்தியாவைவிட அதிகப் பாதிப்பு ஏற்பட இருப்பதாக, அந்தமான் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில புவியியல் ஆய்வாளர்கள், முனைவர் பூர்ணசந்திர ராவ் கூற்றை மறுத்துவருகின்றனர்.  

ஆனால் இது வெறும் யூகத்தின் அடிப்படையில் மட்டுமே கூறப்படுகிறது. நிலநடுக்கத்தையோ சுனாமியாயோ முன்கூட்டியே கணிக்க முடியாது என்று புவியியலாளர்கள் கூறுகின்றனர் 

மீண்டும் சுனாமி வருமா ?

ஆராய்ச்சியாளர்கள்  கூறுவது  இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...