சர்வதேச அளவில், 40க்கும் மேற்பட்ட பறக்கும் மீன் வகைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கை போன்ற உறுப்புக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. பொதுவாக, மற்ற மீன்களில் காணப்படும் துடுப்புக்களே இறக்கைகளாக பரிணாமம் பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பறக்கும் மீன்களில் சில நான்கு இறக்கைகளை பெற்றவைகளாக காணப்படுகின்றன. இந்த மீன்கள், மற்ற மீன்களை காட்டிலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்திற்கு, அதிக தூரத்திற்கு பறக்கும் திறன் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்கு அடியில் இருந்து, நீரை துளைத்து, வேகமாக கிளம்பும் இந்த மீன்கள், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் மேல் எழும்புகின்றன. பின், சில நிமிடங்களுக்கு அதே வேகத்தில் காற்றில் பறக்கிள்றன. காற்றில் பறக்கும் போது, பின்புற வாலை, சுக்கானாக பயன்படுத்தி, செல்ல வேண்டிய திசைக்கு, தங்களின் போக்கை மாற்றிக் கொள்கின்றன. சில மீன்கள் கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு எழும்பி, 600 அடி தூரம் வரை காற்றிலேயே பறக்கும் சக்தி கொண்டவை. நீர்பரப்பில் இறங்கும் வேளையில், குறிப்பிட்ட வேகத்தில் நீருக்குள் பாய்ந்து, மீண்டும் மேலே எழும் வழக்கம் சில பறக்கும் மீன்களிடம் காணப்படுகிறது. பறக்கும் மீன்கள், மற்ற சில நீர் வாழ் இனங்களைப் போலவே வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் குணத்தை கொண்டவை. இது, மீனவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. பறக்கும் மீன் வேட்டைக்கு இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், அதிக ஒளி உமிழும் விளக்குகளை கடல் பரப்பில் பயன்படுத்துகின்றனர். இந்த வெளிச்சத்தால் கவரப்படும் பறக்கும் மீன்கள், ஒட்டு மொத்தமாக ஒரே இடத்திற்கு வந்து குவிகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏராளமான பறக்கும் மீன்களை பிடித்து விடுகின்றனர்! ***
making, whatsapp ,whatsapp trick,how to make cake , how to solve mobile hanging problem, how to solvemobile hanging problem, how to ,tutorial, hack whATSAPP, HACK FACEBOK
Showing posts with label பறக்கும் மீன். Show all posts

Sunday, 12 November 2017
பறக்கும் மீன் - கோலா , flying fish
சர்வதேச அளவில், 40க்கும் மேற்பட்ட பறக்கும் மீன் வகைகள் உள்ளன. இவை, பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கை போன்ற உறுப்புக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. பொதுவாக, மற்ற மீன்களில் காணப்படும் துடுப்புக்களே இறக்கைகளாக பரிணாமம் பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பறக்கும் மீன்களில் சில நான்கு இறக்கைகளை பெற்றவைகளாக காணப்படுகின்றன. இந்த மீன்கள், மற்ற மீன்களை காட்டிலும் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்திற்கு, அதிக தூரத்திற்கு பறக்கும் திறன் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்கு அடியில் இருந்து, நீரை துளைத்து, வேகமாக கிளம்பும் இந்த மீன்கள், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் மேல் எழும்புகின்றன. பின், சில நிமிடங்களுக்கு அதே வேகத்தில் காற்றில் பறக்கிள்றன. காற்றில் பறக்கும் போது, பின்புற வாலை, சுக்கானாக பயன்படுத்தி, செல்ல வேண்டிய திசைக்கு, தங்களின் போக்கை மாற்றிக் கொள்கின்றன. சில மீன்கள் கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு எழும்பி, 600 அடி தூரம் வரை காற்றிலேயே பறக்கும் சக்தி கொண்டவை. நீர்பரப்பில் இறங்கும் வேளையில், குறிப்பிட்ட வேகத்தில் நீருக்குள் பாய்ந்து, மீண்டும் மேலே எழும் வழக்கம் சில பறக்கும் மீன்களிடம் காணப்படுகிறது. பறக்கும் மீன்கள், மற்ற சில நீர் வாழ் இனங்களைப் போலவே வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் குணத்தை கொண்டவை. இது, மீனவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. பறக்கும் மீன் வேட்டைக்கு இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், அதிக ஒளி உமிழும் விளக்குகளை கடல் பரப்பில் பயன்படுத்துகின்றனர். இந்த வெளிச்சத்தால் கவரப்படும் பறக்கும் மீன்கள், ஒட்டு மொத்தமாக ஒரே இடத்திற்கு வந்து குவிகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏராளமான பறக்கும் மீன்களை பிடித்து விடுகின்றனர்! ***
Subscribe to:
Posts (Atom)
மீண்டும் சுனாமி வருமா ?
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவியியல் அழுத்தம் காரணமாக, தென் இந்தியாவுக்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக...

-
கோலா உலகின் பல்வேறு கடல் பகுதிகளில், கடல் மட்டத்தை காட்டிலும், பல அடி உயரத்திற்கு துள்ளிக் குதிக்கும் பறக்கும் மீன்கள் உள்ளன. கடலின்...
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? அழகு குறிப்புகள் அனைத்தும...
-
மீன்களில் உள்ள அதி அற்புத மான மருத்துவ குணங்கள் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா...